ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல்!
தா பாண்டியன் தனிக்கட்சி தொடங்குகிறாரா?
---------------------------------------------------------------------------------
வைகோவுடனும் விஜயகாந்த்துடனும் கடுமையாக
முரண்பட்டுள்ளார் தா பாண்டியன். மக்கள் நலக்
கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில்
இணைய வேண்டும் என்று வலியுறுத்தி
கட்சித் தலைமைக்கு கெடு விதித்துள்ளார்.

மநகூவில் இருந்து விலகாவிட்டால், மீண்டும் தான்
UCPI (ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி) கட்சியைத் தொடங்க
நேரிடும் என்று கட்சித் தலைவர் சுதாகர் ரெட்டியாரிடம்
தெளிவுபடுத்தி விட்டாராம் தா பாண்டியன்.

தா பாண்டியனின் கலகத்தால் குழப்பத்தில் இருக்கிறாராம்
ரெட்டியார்.
------------------------------------------------------------------------------------------------

ஆம், இவருடைய பினாமி. நயவஞ்சகமாக மகேந்திரனைத்
தோற்கடித்தது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன்.


மிக நுட்பமான நகைச்சுவை.அருமை. மனம் திறந்து
பாராட்டுகிறேன். தேசியத் தலைவர் பிரபாகரன் அளித்த
சயனைடு குப்பி இன்னும் வைகோவிடம் இருக்கும்போது,
சே குவேரா அளித்த ருத்ராட்சங்கள் உமாமஹேஸ்வரன்
பன்னீர்செல்வத்திடம் இருக்கக் கூடாதா!
ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியை உடைத்து,
UCPI கட்சியைத் தொடங்கி நடத்தி, காங்கிரசின்
கைத்தடியாய் மாறி, வடசென்னை தொகுதியில்
காங்கிரசின் கை சின்னத்திலேயே போட்டியிட்டு
காங்கிரசின் தயவில் எம்.பி.யும் ஆனார்
என்பது தா பாண்டியன் சோரம் போன வரலாறு.
வேறு யார் மீதும் இப்படிக் குற்றம் சொல்ல முடியுமா?


சீமான் அவ்வாறு பேசியதன் வீடியோ கிளிப்பிங் அல்லது
பேப்பர் கட்டிங் தரவும். நார் நாராய்க்  கிழிக்க வசதியாக இருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி
அவர்களே ரெட்டியார் ஆவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக