வியாழன், 7 ஏப்ரல், 2016

திருமாவளவன் கருத்து!
யுவராஜ் வரவேற்பு!!
-------------------------------------------
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும்
யுவராஜ் அவர்கள் திருமாவளவனின் கருத்தை
வரவேற்றுள்ளார்.

ஒருவரின் சாதியின் பெயரைச்  சொல்லி அவரைத் திட்டுவது
வெறும் தனிநபர் விமர்சனமே என்று வைகோ விவகாரத்தில்
திருமாவளவன் கருத்துக் கூறி இருந்தார்.

இக்கருத்தை யுவராஜ் வரவேற்றுள்ளார். இதைத்தான்
நாங்களும் பல காலமாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
சாதியைச் சொல்லித் திட்டுவது வெறும் தனிநபருக்கு
எதிரான விமர்சனம் மட்டுமே.

இதற்காக திட்டியவர் மீது பி.சி.ஆர் மற்றும் வன்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவது அநியாயம் என்ற
எங்களின் கருத்தை  திருமாவளவனே ஏற்றுக் கொண்டிருப்பது
மகிழ்ச்சியைத் தருகிறது என்று யுவராஜ் தெரிவித்ததாக
யுவராஜுக்கு ஆதரவான கொங்கு இளைஞர்கள் தெரிவித்தனர்.
************************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக